சேலம் வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய

சேலம் வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய
X
10 பேருக்கு ரூ.4 லட்சம் அபராதம்
சேலம் சங்ககிரி வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனக்காப்பாளர்கள் சோதனை நடத்தினர். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் வனப்பகுதியில் முயலை வேட்டையாடி அதன் கறியை வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது சேலம் நெய்க்காரப்பட்டி சேர்ந்த கேசவன், குபேரன், சீனிவாசன், அன்பழகன், சதீஷ், சவுந்தர், குமார், அன்பரசன், வெங்கடேஷ், பூபாலன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய போது வனப்பகுதியில் முயல் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 10 பேருக்கும் தலா ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.4 லட்சம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Next Story