சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

X
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 3 மாத குறுகிய கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 18.4.2025-க்குள் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயன்பெறலாம். சேர்க்கைக்கு தங்களது அசல் ஆவணங்களான மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் 4 புகைப்படங்களுடன் சேலம் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி பயிற்சி விவரத்தை தெரிந்து கொள்ளலாம். பயிற்சிக்கு சேலம்-ஏற்காடு மெயின்ரோட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

