சேலம் சூரமங்கலம் பகுதியில் நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச் செயலாளர்

X
சேலம் சூரமங்கலத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நீர்மோர் பந்தலை திறக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சூரமங்கலம் உழவர் சந்தை எதிரே அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை எடப்பாடி பழனிச்சாமி இன்று ரிப்பன் வெற்றி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, கம்மங்கூழ், நுங்கு மற்றும் இளநீர் போன்றவற்றை வழங்கினார். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டுச் சென்ற சில வினாடிகளிலேயே அவரை வரவேற்க வந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருவரையொருவர் முந்தியடித்து கொண்டு பந்தலில் வைக்கப்பட்டிருந்த பழ வகைகள், நுங்கு, இளநீர் உள்ளிட்டவற்றைகளை எடுத்துச் சென்றனர்.
Next Story

