நாளை மறுநாள் நடக்கிறது: வீரபாண்டி தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

நாளை மறுநாள் நடக்கிறது: வீரபாண்டி தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
X
கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் அறிக்கை
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சேலம் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வீரபாண்டி சட்டசபை தொகுதிக்கான பாகமுகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது. அதன்படி அன்று காலை 10 மணிக்கு சேலம் தெற்கு மற்றும் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கான கூட்டம் அமானிகொண்டலாம்பட்டியில் உள்ள பாலமுருகன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு வீரபாண்டி ஒன்றியத்திற்கான ஆலோசனை கூட்டம் அரியானூரில் உள்ள ஆதித்யா மகாலில் நடக்கிறது. எனவே இந்த கூட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி பார்வையாளர்கள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள், பாகமுகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Next Story