ரம்ஜான் பண்டிகையையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

X

ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் தொழுகை
ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள திறந்தவெளி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் இல்லத்தில் அமைதி நிலவவும், வளம் பெறவும், தங்கள் செய்யும் தொழில் அபிவிருத்தி அடையவும் இறைவன் நல்வழியை காட்ட வேண்டும் என சிறப்பு பிரார்த்தனையும் மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து ஒருவருக்கொருவர் கட்டியணைத்து தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதேபோல சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
Next Story