ரமலான் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள்

ரமலான் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள்
X
ரமலான் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட இடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கம் 11-வது வார்டில் காஞ்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக, பேரூர் செயலாளர் மோகன்தாஸ்,துணைச் செயலாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் முன்னிலையில் வார்டு கவுன்சிலர் K அருண்பாபு மற்றும் கலா செல்வம் தலைமையில் புனித ரமலான் விழா கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு புடவை, வேட்டி,இனிப்பு மற்றும் அரிசி ஆகியவை வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சியான விசிக பேரூர் நிர்வாகி L I C ராஜேந்திரன், வீரா வினோதவன், தமுமுக மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் தமின் அன்சாரி, பேரூர் செயலாளர் சாகுல்,அமித்,பிரண்ட்ஸ் கேட்டரிங் நிறுவனர் KM ஜனார்த்தனன் ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story