சுங்ககேட்- டூவீலரை வேகமாக ஓட்டிச் சென்று சென்டர் மீடியினில் மோதி இளைஞன் உயிரிழப்பு.

சுங்ககேட்- டூவீலரை வேகமாக ஓட்டிச் சென்று சென்டர் மீடியினில் மோதி இளைஞன் உயிரிழப்பு.
சுங்ககேட்- டூவீலரை வேகமாக ஓட்டிச் சென்று சென்டர் மீடியினில் மோதி இளைஞன் உயிரிழப்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட டி செல்லாண்டிபாளையம் ஒத்தையூர் சாலையைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ரூபன் வயது 19. இவர் கரூரில் செயல்படும் ஒரு பிரியாணி கடையில் சப்ளையராக பணியாற்றி வந்தார். மார்ச் 30ம் தேதி அதிகாலை 2:15 மணி அளவில், கரூர் - பாளையம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். சுங்ககேட் பகுதியில் ஒரு கடை அருகே வந்தபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியினில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ரூபனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ரூபனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ரூபனின் தாயார் சிந்து வயது 45 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை கொண்ட காவல் துறையினர், உயிரிழந்த ரூபனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.
Next Story