கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

X

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துக்கொண்டு 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆசிர்வசித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலக்ஷ்மி மதுசூதனன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story