ஏமூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.

ஏமூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
ஏமூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏமூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் வயது 42 இவர் மார்ச் 28ஆம் தேதி மாலை 3:30 மணி அளவில், ஏமூரிலிருந்து கரூர் ஆர்டிஓ அலுவலகம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள தங்கவேல் என்பவரது தோட்டம் அருகே வந்தபோது, எதிர் திசையில் வேகமாக ஓட்டி வந்த டிஎன் 47 பிபி 2422 என்ற எண் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஜெகதீசன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த ஜெகதீசனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஜெகதீசனின் உறவினர் சரவணன் வயது 45 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய டூவீலர் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.
Next Story