டூவீலருக்கு தீ வைத்த நால்வர் கைது

X
மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள அகஸ்தியர் தெருவில் ஒரு ஆட்டோவிற்கு முன்று கார் கண்ணாடிகள் உடைத்தும் இரு பைக் தீவைத்து எரிக்கப்பட்டது. இதே போல் கீரைத்துறை அம்பேத்கர் நகர் பகுதியில் ஒரு பைக் ஆட்டோ, இரண்டு கார்கள் கண்ணாடி நேற்று இரவு (மார்ச்.30) உடைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கீரை துறை காவல் உதவி ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் பொதுமக்கள் கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து CCTV காட்சிகளை ஆய்வு ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் அருகே உள்ள காட்டுப் பகுதிக்குள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த அரை மணி நேரத்துக்குள்ளேயே உதவி ஆய்வாளர் செல்வம் தலைமையிலான ஐந்து காவலர்கள் காட்டுப் பகுதியில் இருந்தனர். அப்பொழுது அங்கு பதுங்கி இருந்த பாஸ்கர், ஆல்வேஸ்வரன், முருகன், சக்திவேல் ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர். தகவல் கிடைத்த அரை மணி நேரத்திலேயே குற்றவாளியை கைது செய்த போலீசாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர் மேலும் தொடர்ந்து கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் எனவும் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
Next Story

