நீலகிரி மாவட்டம்குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நான்காவது கொண்டை ஊசி வளைவு அருகே கொழுந்து விட்டு எரிந்த கார்....

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர்
நீலகிரி மாவட்டம்குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நான்காவது கொண்டை ஊசி வளைவு அருகே கொழுந்து விட்டு எரிந்த கார்.... தொடர் விடுமுறையால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தற்போது அதிகளவில் நீலகிரி மாவட்டத்திற்கு வர வாங்கியுள்ளனர். இதனால் குன்னூர் மலைப்பாதையில் அவ்வப்போது கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று மாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்வதற்காக நவீன் உள்ளிட்ட ஐந்து கல்லூரி மாணவர்கள் குன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென காரில் புகை ஏற்பட்டதால் மாணவர்கள் அலறி அடித்து காரை விட்டு ஓடினர்.பின்னர் சிறிது நேரத்தில் கார் தீ பிடித்து மல மல என கொழுந்து விட்டு எரிய துவங்கியது.இதனால் அவர்கள் செய்வதை செய்வதறியாமல் திகைத்துப் போயினர்.இது குறித்து தகவல் அறிந்த உடன் குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இச்சம்பவத்தால் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் இரு புறங்களிலும், அணிவகுத்து நின்றது.காரில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்ட பின்னர் போலீசார் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர். மலைப்பாதையில் ஏற்பட்ட இந்த கார் தீ விபத்து குன்னூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story