மக்கும் குப்பை மக்காத குப்பை விழிப்புணர்வு : கல்லூரி மாணவிகள் வினோத முயற்சி

மக்கும் குப்பை மக்காத குப்பை விழிப்புணர்வு : கல்லூரி மாணவிகள் வினோத முயற்சி
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் சடலம் போல் நடித்த கல்லூரி மாணவி : நூதன விழிப்புணர்வு மக்கும் குப்பை மக்காத குப்பை விழிப்புணர்வு : கல்லூரி மாணவிகள் வினோத முயற்சி பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் மண் இறந்தது போல சடலமாக நடித்த மாணவிக்கு பிளாஸ்டிக் குப்பைகளால் மாலையை அணிவித்து சக கல்லூரி மாணவிகள் நூதன விழிப்புணர்வு செய்தனர். சென்னையை அடுத்த பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் சிந்தி கலை மற்றும் கல்லூரி மாணவிகள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது மக்கும் குப்பை மக்காத குப்பையை பிரித்து போடுவது தொடர்பான நாடகம் ஒன்றை நடத்தி பேருந்து நிலையத்திலிருந்து மக்களை மாணவிகள் விழிப்புணர்வு செய்தனர். அதைத்தொடர்ந்து ஒரு மாணவி மண் இறந்து விட்டது போல சடலமாக நடித்தார். அவருக்கு சகமானவிகள் பிளாஸ்டிக் குப்பைகளால் ஆன மாலையை அணிவித்து, மண் இறந்து விட்டது என அழுது அஞ்சலி செலுத்தினர். இந்த வினோத விழிப்புணர்வு சுற்றி இருந்த மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
Next Story