இலவச எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம்!

X

குடியாத்தம் ரோட்டரி சங்கத்தில் இலவச எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கத்தில், டாக் எம்.கே.பி. ஹோமியோ கிளினிக், சுவாமி மெடிக்கல்ஸ், போர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இலவச எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம் நடத்தினர். ரோட்டரி தலைவர் சி.கண்ணன் தலைமை தாங்கினார். 135 பேருக்கு பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டன. மருத்துவர் பி.அபிநயா தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமை ஜே.கே.என்.பழனி, கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம். பூபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Next Story