ஆந்திர மாநில அதிகாரிகள் களத்தில் இறங்கியதால் சுதாரித்துக் கொண்ட தமிழக பொதுப்பணித்துறையினர்

கிருஷ்ணா கால்வாயை காப்பதற்கு ஆந்திர மாநில அதிகாரிகள் களத்தில் இறங்கியதால் சுதாரித்துக் கொண்ட தமிழக பொதுப்பணித்துறை யினர் கரையின் மீது கூடுதல் பாரத்துடன் இரவு பகல் பாராமல் செல்லும் டிப்பர் லாரிகளை தடுக்கும் விதமாக பள்ளம் தோண்டி தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்
திருவள்ளூர்: கண்டலேறு அணையில் இருந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வரும் சாய் கிருஷ்ணா கால்வாயை காப்பதற்கு ஆந்திர மாநில அதிகாரிகள் களத்தில் இறங்கியதால் சுதாரித்துக் கொண்ட தமிழக பொதுப்பணித்துறை யினர் கரையின் மீது கூடுதல் பாரத்துடன் இரவு பகல் பாராமல் செல்லும் டிப்பர் லாரிகளை தடுக்கும் விதமாக பள்ளம் தோண்டி தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். ஆந்திர அதிகாரிகள் வந்ததால் திருட்டு மண் லோடு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது:தமிழக பொதுப்பணித் துறையினர் அலட்சியம் காட்டி வந்த நிலையில் ஆந்திர மாநில அதிகாரிகள் களத்தில் இறங்கி தடுத்தனர் இதனிடையே தமிழக பொதுப்பணித்துறையினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆந்திர மாநில பொதுப்பணித்துறையினர் வேண்டுகோள் வைத்த நிலையில் பரபரப்பு புகார் ஒன்றையும் தெரிவித்தனர் பட்டா இடத்தில் இரு மாநில எல்லைகளில் மண் எடுக்க கனிம வளத்துறை அதிகாரிகள் தான் பணம் வாங்கிக் கொண்டு ராயல் டி என்ற பெயரில் கிருஷ்ணா கால்வாய் மீது மண் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளை அனுமதித்து சுமார் 4 கி மீ அளவிற்கு கால்வாயை கரையை சேதப்படுத்தி உள்ளனர். ஆந்திர மாநில காவல்துறை வருவாய் த்துறையினர் மூலம் நடவடிக்கை எடுப்போம் என ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர் உடனடியாக மண் ஏற்றிச் செல்லும் லாரிகளை காவல்துறை மூலம் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என உறுதி அளித்தனர். இந்த நிலையில் இன்று தமிழக எல்லை ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் கிருஷ்ணா நதி நீர் செல்லும் சாய் கால் வாயில் பள்ளம் தோண்டி லாரிகள் அதன் மீது செல்லாத வண்ணம் தடுப்புகளை வைத்து ஆந்திர எல்லைக்குள் இருந்து வரும் சட்ட விரோதமாக சவுடு மற்றும் கிராவல் செம்மண் மண் கடத்தும் நபர்களை தடுத்துள்ளனர். ஏற்கனவே கிருஷ்ணா கால்வாய் ஓரம் பயிரிட்ட வாழை நெற்பயிர்கள் மண் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளால் கடும் சேதம் அடைந்த நிலையில் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் அவளியாகச் செல்லும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த நிலையில் தற்போது கிருஷ்ணா கால்வாய் மீது செல்லும் லாரிகளை பொதுப்பணித்துறையினர் தடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
Next Story