குண்டும் குழியுமாக சாலை விபத்து ஏற்படும் அபாயம்

X

கோரிக்கை
பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சுகதேவ் தெரு பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு சிமெண்ட் சாலை அமைப்பதற்காக அப்பகுதியில் இருந்த பேவர் பிளாக் கற்கள் அகற்றப்பட்டன. கடந்த வாரம் அப்பகுதியில் பாதி இடத்தில் மட்டுமே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள பகுதி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
Next Story