கோட்டலாம்பாக்கம்: பள்ளியில் ஆண்டு விழா

கோட்டலாம்பாக்கம் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது
கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் கோட்டலாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை இராஜேஸ்வரி தலைமை ஏற்று வரவேற்புரை வழங்கினார். பள்ளி ஆண்டறிக்கையை ஆசிரியர் பாலமுருகன் வழங்கினார். அண்ணாகிராம வட்டாரக் கல்வி அலுவலர் புவனேஸ்வரி வாழ்த்துரை வழங்கினார்.  ஆசிரியர் பயிற்றுனர் சுந்தரமூர்த்தி மற்றும் சிறப்பு ஆசிரியர் கதிர்வேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேற்படி பள்ளி ஆண்டு விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். முன்னதாக பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருள்கள், மற்றும் சான்றிதழ்களை அண்ணாகிராமம் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர், ஊராட்சி மன்றத் தலைவி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஆகியோர் வழங்கினார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அசோகன் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுபொருட்கள், இனிப்புகள் வழங்கி மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். பள்ளியின் உதவி ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.
Next Story