கடலூர்: ஓய்வு பெறும் காவலர்கள் கௌரவிப்பு

X

கடலூரில் ஓய்வு பெறும் காவலர்கள் கௌரவிப்பு
கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்புடன் பணியாற்றி இன்று 31.03.2025 தேதி ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்கள் இளங்கோவன், குமாரசாமி, தெய்வநாயகம், கோபால், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜா, ஜெயராமன், தலைமை காவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர்களை கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS சால்வை அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிக்காத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார். மேலும் ஓய்வு பெற்ற காவல் துறையினர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு ஊதியம், சிறப்பு சேமநலநிதி, குடும்ப சேமநலநிதி ஆகிய பண பயன்கள் விரைவாக கிடைக்க வேண்டும் என காவல்துறை அமைச்சுப் பணியாளர்களிடம் அறிவுரை வழங்கினார்.
Next Story