பெரியநாயகி அம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா

X
அரியலூர், மார்ச் 30- அரியலூர் நகரம், குறிஞ்சான் குளம் தெருவிலுள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரிக்கரையில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான பக்தர்கள், மல்லிகை, முல்லை, ரோஜா, தாழம்பூ, மரிக்கொழுந்து, தாமரை, அரளி உள்பட பல்வேறு வகையான பூக்களை முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாத்தப்பட்டது. பின்னர், அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

