ஓசூர்: ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை எம்.பி. பங்கேற்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியிலும் ரம்ஜான் பண்டிகையை யொட்டி பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ஓசூர் அருகே பாகலூரில் ஜீவாநகரில் உள்ள ஜாமியா மசூதியில் தொழுகை நடத்தி விட்டு வந்த முஸ்லிம்களுக்கு, இந்து தர்ம சேவா சங்கம் என்ற அமைப்பினர், பேரீச்சம் பழம், இனிப்புகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கி, சகோதர பாசத்துடன் கட்டி அணைத்து, ஆரத்தழுவி அவர்களை ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதேபோல் ஒசூர் ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் கோபிநாத் எம்.பி. பங்கேற்று முஸ்லிம்களை ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Next Story

