வாகன விபத்தில் பெண் பலி.

X
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே சிங்கம்புணரி குமரிபட்டி ரமேஷின் மனைவி நந்தினி (34) என்பவர் தனது கணவர் ரமேஷ் வெளிநாட்டில் பணிபுரிவதால் நந்தினி அட்டப்பட்டியில் அம்மா சுசீலா (55)வீட்டில் இரு குழந்தைகளுடன் தங்கி தனியார் மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று (மார்ச் .31) இரவு மேலுாரில் உறவினர் வீட்டு நிகழ்ச்சி முடிந்த பிறகு தனது சொந்த ஊருக்கு நந்தினி இருசக்கர வாகனத்தில் அம்மாவை அழைத்துச் சென்று கொண்டிருந்த போது செட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் பின்னால் மதுரை - திருச்சி நோக்கி சென்ற கார் மோதியதில் நந்தினி உயிரிழந்தார். சுசிலா பலத்த காயங்களுடன் மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக திருச்சியை சேர்ந்த கார் டிரைவர் முகமது சபிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

