மணலூா்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை.

X

காலை 7 மணி முதல் 9 மணி வரை பல ஆயிரம் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலையில் : மணலூா்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை பல ஆயிரம் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியா்கள் ஒருவரை ஒருவா் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா். இதேபோல, தொழுகை முடிந்து வெளியே வந்த தொழிலதிபா்கள் எம்.இ.ஜமாலுதீன், பஷீா்அகமது உள்ளிட்ட இஸ்லாமியா்களுக்கு சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன், திமுக மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் மற்றும் திமுகவினா் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தனா். இதேபோல, அவலூா்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானம், செங்கம் சாலையில் உள்ள பாவாஜி நகா் ஈத்கா மைதானம், மத்தலாங்குளத் தெருவில் உள்ள தா்கா ஆகிய இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
Next Story