வந்தவாசி ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை.

வந்தவாசி ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை.
X
ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் உள்ளிட்ட திமுகவினா் அங்கு வந்து இஸ்லாமியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனா். தொழுகை முடிந்தவுடன் ஒருவரையொருவா் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா். மேலும், ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் உள்ளிட்ட திமுகவினா் அங்கு வந்து இஸ்லாமியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
Next Story