சேலம் அருகே மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு

சேலம் அருகே மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
X
போலீசார் விசாரணை
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னாம்பள்ளியை சேர்ந்த நாராயணன் மனைவி ருக்மணி (வயது 70). இவர், நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு வீட்டின் கதவை பூட்டுவதற்காக வெளியே வந்துள்ளார். அங்கு மறைந்து இருந்த நபர், திடீரென ருக்குமணி கழுத்தில் அணிந்து இருந்த 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இதுதொடர்பான புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story