ரம்ஜான் பண்டிகையையொட்டி

ரம்ஜான் பண்டிகையையொட்டி
X
சேலம் மத்திய சிறை கைதிகளுக்கு சிக்கன் பிரியாணி
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1,200-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி கைதிகள் அனைவருக்கும் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. சிறை வளாகத்தில் கைதிகள் பராமரிப்பில் உள்ள கோழிப்பண்ணையில் இருந்து 270 கிலோ சிக்கனை இஸ்லாமிய அமைப்புகள் வாங்கி சிறை நிர்வாகத்திடம் கொடுத்தது. தொடர்ந்து அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களும் வெளியில் இருந்து வாங்கப்பட்டு சிறையில் சிக்கன் பிரியாணி தயாரிக்கப்பட்டு அனைத்து கைதிகளுக்கும் வழங்கப்பட்டது. இதேபோல் பெண்கள் சிறையிலும் கைதிகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
Next Story