ரம்ஜான் சிறப்பு தொழுகை

ரம்ஜான் சிறப்பு தொழுகை
X
தொழுகை
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள ஈத்தா மைதானத்தில் நேற்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. முன்னதாக நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள ஜிம்மா பள்ளி வாசலில் இருந்து கடை வீதி வழியாக ஊர்வலமாக சென்று ஈத்கா மைதானத்தை அடைந்தனர். தொடர்ந்து அனைத்து பள்ளி ஜாமாத்தார்கள் முன்னிலையில் சிறப்பு தொழுகை நடந்தது. நிகழ்ச்சியில் நடுத்தக்கா, அண்ணா நகர், காட்டுபுரித்தக்கா, கோட்டைமேடு, ஏ.கே.டி.,நகர், வ.உ.சி., நகர், கரியப்பா நகர் ஆகிய பள்ளி வாசல்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
Next Story