தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, நரசிமேடு பகுதியில், இன்று ஏப்ரல் 01,மாணவர் சேர்க்கைக்காக சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்து சாலையில் நிலை தடுமாறி கவிழ்த்து விபத்து ஏற்பட்டது. இதில் மாணவர் சேர்க்கைக்காக சென்றதால் வாகனத்தில் பள்ளி குழந்தைகள் இல்லை. உள்ளே சில ஆசிரியர்கள் மட்டும் இருந்துள்ளனர், காயமடைந்த ஆசியர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள பென்னாகரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஏரியூர் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story



