சோளிங்கர் விநாயகர் கோவில் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை

சோளிங்கர் விநாயகர் கோவில் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை
X
விநாயகர் கோவில் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை
சோளிங்கரில் உள்ள பழமை வாய்ந்த கமல விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவில் புனரமைப்பு பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பி னர் அசோகன், நகராட்சி துணைத்தலைவர் பழனி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள் கோபால், அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து கோவில் புனரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். 2 மாதத்திற்குள் புனரமைப்பு பணிகள் முடிவு பெற்று மகாகும்பாபிஷேகம் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சடகோபாலன், லீலா வதி, சோழபுரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் சாவித்திரி பெருமாள், சுகந்தி முருகேசன், மகேஷ்வரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story