விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற கால அவகாசம் நீட்டிப்பு, வேளாண் அதிகாரி தகவல்
தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தர்மபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 930 விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுகிறார்கள். இவர்களில் 62 ஆயிரத்து 356 விவசாயிகள் மட்டுமே உரிய ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து தனித்துவ அடையாள எண் பெற்று உள்ளனர். அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு மத்திய அரசின் வேளாண் ஊக்க தொகை வழங்கப்படாது.இந்த திட்டத்தில் பயன்பெறாத மற்ற விவசாயிகளும் தனித்துவ அடையாள எண் பெற்றால் மட்டுமே வேளாண்மை துறை,தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சி துறை கால் நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளில் வழங்கப்படும் மானிய திட்டங்கள் மூலம் பயன் பெறமுடியும். தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங் கப்படும் பயிர்க்கடன், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்படும் வங்கி கடன்கள், இந்த ஆண்டு முதல் பயிர்க்கடன் பெறும் அனைத்து பயிர்களுக்கும் தனித்துவ அடையாள எண் கட்டாயம் அவசியமாகிறது. எனவே விவசாயிகள் கட் டணமில்லாமல் ஆன்லைனில் பதிவு செய்ய பொது சேவை மையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கிரா மங்களுக்கு வரும் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் விதை சான் றிப்புதுறை அலுவலர்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.இதேபோல் சமுதாய வள பயிற்றுனர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும் இந்த பணியில் ஈடுப டுத்தப்பட்டு உள்ளனர். பதிவு செய்ய ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண், கணினி சிட்டா நகல் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். தனித்துவ அடையாள எண் பெறுவதற்கான கால அவகாசம் வருகிற 15-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story