கோவை: உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் !

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, ஆர்.எஸ். புரம் காவல் நிலையம் மற்றும் தனியார் கல்லூரி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை இணைந்து, Eat Right என்ற உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை, தெருக்கூத்து மற்றும் பல்வேறு விளையாட்டுக்கள் மூலம் வெற்றிகரமாக நடத்தியது.
கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, ஆர்.எஸ். புரம் காவல் நிலையம் மற்றும் தனியார் கல்லூரி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை இணைந்து, Eat Right என்ற உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை, தெருக்கூத்து மற்றும் பல்வேறு விளையாட்டுக்கள் மூலம் வெற்றிகரமாக நேற்று நடத்தியது. இந்த முகாமில், ஆரோக்கியமான உணவு முறைகள், பாதுகாப்பான உணவு தேர்வு, சரிவிகித உணவின் முக்கியத்துவம், சிறுதானிய உணவுகளின் பயன்கள், உடற்பயிற்சியின் அவசியம் போன்ற பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் தமிழ்செல்வன், சிறந்த உணவு, பாதுகாப்பான உணவு மற்றும் நீடித்த உணவு முறைகளின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். தனியார் கல்லூரி மாணவர்கள் Eat Right, Eat Safe மற்றும் Eat Healthy போன்ற முக்கிய கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு உருவகங்களுடன் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த முகாமில், Eat Right நாகம் - ஊதுகொம்பு விளையாட்டு, Stretch Yourself டிஸ்கோ, Eat Right மிஸ்டரி பாக்ஸ் மற்றும் சிறுதானியங்கள் நினைவுப் போட்டி போன்ற பல்வேறு விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. சுமார் 4000 க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர். 500 க்கும் மேற்பட்டோர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றனர்.
Next Story