மாற்றுத்திறனாளி சிறுமிக்கு சக்கர நாற்காலி

X

நாற்காலி
கிராம சபை கூட்டத்தில் சக்கர நாற்காலி கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளி சிறுமிக்கு 2 நாட்களில் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. கடந்த 29ம் தேதி திருக்கோவிலுார் தொகுதிக்குட்பட்ட அருணாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் பொன்முடி, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற மகேஸ்வரி, மாற்றுத்திறனாளியான தனது மகள் பள்ளிக்கு செல்ல சிறப்பு சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தார்.அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக சக்கர நாற்காலி வழங்க அமைச்சர் பொன்முடி அதிகாரிகளை அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தின் மூலம் 1.05 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மின் கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியை அமைச்சர் பொன்முடி நேற்று சிறுமி பரமேஸ்வரிக்கு வழங்கினார். மனு அளித்த இரண்டு நாட்களில் சிறப்பு சக்கர நாற்காலி வழங்க ஏற்பாடு செய்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அவரது பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
Next Story