கோவை: மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய ரம்ஜான் கொண்டாட்டம் !

X

கோவையில் ரம்ஜான் பண்டிகை மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நேற்று கொண்டாடப்பட்டது.
கோவையில் ரம்ஜான் பண்டிகை மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நேற்று கொண்டாடப்பட்டது. கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் நிர்வாகிகள் ரம்ஜான் தொழுகையை முடித்து கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலுக்குச் சென்றனர். அங்கு கோவில் நிர்வாகிகள் மற்றும் அய்யனார் ஆதீனம் ஆகியோரை சந்தித்து ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும், கோவிலில் இருந்த பக்தர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். கோவில் நிர்வாகிகளும் அய்யனார் ஆதீனமும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து இந்து கடவுள்களின் படங்களை வழங்கி அன்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வு கோவை நகரில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் அமைந்தது.
Next Story