கலெக்டர் சான்றிதழ் வழங்கல்

கலெக்டர் சான்றிதழ் வழங்கல்
X
வழங்கல்
கல்வராயன்மலை தாலுகாவில் உயர்கல்வி பயிலும் மாணவியரை பாராட்டி, கலெக்டர் சான்றிதழ் வழங்கினார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பேசியதாவது: தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து முதன் முதலில் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமோ, ஐ.டி.ஐ., இளநிலை உயர்கல்வி ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவிகளுக்கு படிப்பிற்கான உதவித்தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்.
Next Story