கோவை: ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்ற சிறப்பு தொழுகை !

குனியமுத்தூர் பகுதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இணைந்து சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.
கோவையில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின் நிறைவாக, நாடு முழுவதும் ரமலான் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு தலைமை ஹாஜி அறிவித்தபடி, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவையில் உள்ள மசூதிகளில் சிறப்புத் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை உக்கடம், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், குனியமுத்தூர், டவுன்ஹால் மற்றும் மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். கோவை குனியமுத்தூர் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய மெட்ரிகுலேசன் பள்ளி மைதானம் திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதில் பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்த பிறகு இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
Next Story