சுங்கச்சாவடியில் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்வு; வாகன ஓட்டிகள் கண்டனம்!

சுங்கச்சாவடியில்  கட்டணம் நள்ளிரவு முதல் உயர்வு;  வாகன ஓட்டிகள் கண்டனம்!
X
தூத்துக்குடி சுங்கச்சாவடியில் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்வு வாகன ஓட்டிகள் கண்டனம்
தூத்துக்குடி சுங்கச்சாவடியில் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்வு வாகன ஓட்டிகள் கண்டனம் நேற்று நள்ளிரவு முதல் தமிழக முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஐந்து சதவீதம் முதல் 10% வரை உயர்த்தப்பட்டுள்ளது ஆறு மாதத்திற்கு ஒருமுறை இவ்வாறு சுங்கச்சாவடி கட்டணம் மத்திய அரசு சார்பில் உயர்த்தப்படுகிறது தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு காரணமாக நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் தேர்தல் காலங்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை குறைப்போம் இதைக் குறைப்போம் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள் ஆனால் பின்னர் மறந்து விடுகிறார்கள் இவ்வாறு ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுங்க சாவடி கட்டணம் உயர்வு மற்றும் பல்வேறு கட்டணம் உயர்வு காரணமாக வாகனத்தை வைத்து இயக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர் எனவே இந்த சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்
Next Story