கடைகளில் தனி வட்டாட்சியர் பறக்கும் படை ஆய்வு

X

திண்டுக்கல் நாகல் நகர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் தனி வட்டாட்சியர் பறக்கும் படை திடீர் ஆய்வு
திண்டுக்கல் நாகல்நகர் சந்தைப்பேட்டை வேடப்பட்டி ஆர் எம் காலனி உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் திண்டுக்கல் தனி வட்டாட்சியர் பறக்கும் படை சார்பில் டீக்கடைகள் மற்றும் பேக்கரியில் தனி தாசில்தார் பறக்கும் படை சக்திவேலன், வருவாய் ஆய்வாளர்கள் சண்முகநாதன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கடைகளில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய எரிவாயு உருளையை வியாபார பயன்பாட்டிற்கு உபயம் செய்வதை கண்டறிந்து எரிவாய் உருளைக் கைப்பற்றி கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய எரிவாயு உடலை கடைகளில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே கடை உரிமையாளர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story