இருளர் குடும்பத்தினருக்கு புதிய தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

X

இருளர் குடும்பத்தினருக்கு புதிய தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்டது, சேம்புலிபுரம் கிராமம். இங்குள்ள பச்சைவாழியம்மன் கோவில் அருகே, கடந்த 35 ஆண்டுகளாக, இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.மரம் வெட்டுதல், தேங்காய் பறித்தல் போன்ற கூலி வேலைக்குச் சென்று, தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2007ம் ஆண்டு தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக பட்டா வழங்கப்பட்டு, 16 குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டிக் தரப்பட்டன.இந்த வீடுகள் தற்போது, மிகவும் பழுதடைந்து, மழைக் காலங்களில் வீட்டில் தண்ணீர் கசிவதால் அவதிப்படுகின்றனர். தற்போது, இங்கு கூடுதலாக உள்ள 13 குடும்பத்தினருக்கு வீடு இல்லாததால், ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்களாகவும், குடிசைகள் அமைத்தும் வசித்து வருகின்றனர். ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசிப்பதால், இடநெருக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சேம்புலிபுரம் பகுதியில் வசிக்கும் 29 இருளர் குடும்பத்தினருக்கும், புதிய தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
Next Story