ஆத்தூர் சுங்கச்சாவடியில் மீண்டும் சுங்க கட்டணம் உயர்வு!

X

ஆத்தூர் சுங்கச்சாவடியில் மீண்டும் சுங்க கட்டணம் உயர்வு!
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் மீண்டும் சுங்க கட்டணம் உயர்வு! சுங்க கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை! தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு நள்ளிரவுமுதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் கனரக வாகனங்களுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதால் கட்டணத்தை குறைக்க கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தமிழ்நாட்டில் 1992- 2008 போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர், ஏப்ரல் முதல் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது,அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகள் 40 சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு முதல் கட்டன உயர்வு அமலுக்கு வந்தது.செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் அருகே செயல்பட்டு வரும் ஆத்தூர் சுங்கச்சாவடியில் மீண்டும் கட்டண உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது, இந்த சுங்கச்சாவடியில் கார் மினி வேன் தவிர்த்து பேருந்துகள்,கனராக வாகனங்களுக்கு ரூ.5 முதல் 30 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது ஏற்கனவே பெட்ரோல் டீசல் உயர்த்தப்பட்டு இருப்பதால் விலைவாசிகள் பொருட்களும் உயர்ந்த நிலையில் இருக்கும் நிலையில் மேலும் சுங்க கட்டணம் உயர்த்திருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத சூழ்நிலை உருவாகும் எனவே ஒன்றிய அரசு சுங்கச்சாவடி கட்டண உயர்வை குறைத்திட வேண்டும் என வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர், சுங்க கட்டணம் உயர்வால் மிக சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை உருவாக கூடும் என்பதால் ஒன்றிய அரசு கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story