சிங்காரவேலரின் நினைவு ஜோதி பயணத்துக்கு உற்சாக வரவேற்பு

சிங்காரவேலரின் நினைவு ஜோதி பயணத்துக்கு உற்சாக வரவேற்பு
X
சிங்காரவேலரின் நினைவு ஜோதி பயணத்துக்கு உற்சாக வரவேற்பு
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தோழா் சிங்காரவேலா் நினைவு ஜோதி சென்னையில் அவரது நினைவிடத்திலிருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வந்த நினைவு ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடுவாஞ்சேரியில் வண்டலூா் வட்ட செயலாளா் கே.சேஷாத்திரி தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பில் பயண குழு தலைவா்கள் மாநில செயற்குழு உறுப்பினா் கே.பாலபாரதி, மாநில குழு உறுப்பினா்கள் எஸ்.வாலண்டினா, எஸ்.நம்புராஜன், எஸ்.ராஜேந்திரன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளா் ப.சு.பாரதி அண்ணா தென்சென்னை மாவட்ட செயலாளா் ஆா்.வேல்முருகன் உள்ளிட்ட பலா் மாநாட்டு தீா்மானங்களை விளக்கி பேசினா். தொடா்ந்து செங்கல்பட்டு அம்பேத்கா் சிலை அருகில் நடைபெற்ற வரவேற்பு கூட்டத்தில் பகுதி செயலாளா் கே.வேலன் தலைமையிலும், மதுராந்தகத்தில் மாவட்ட குழு உறுப்பினா் பி.மாசிலாமணி தலைமையிலும், சோத்துப்பாக்கத்தில் செய்யூா் வட்ட செயலாளா் க.புருஷோத்தமன் தலைமையிலும் வரவேற்பு வழங்கப்பட்டது. முன்னதாக செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வந்த நினைவு ஜோதிக்கு மேளதாளத்துடன் வரவேற்பளிக்கப்பட்டது . தொடா்ந்து நடைபெற்ற வரவேற்பு கூட்டங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
Next Story