புதுக்கடை:மது விற்ற பெண் கைது

X
புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளஸ்சிங் என்பவர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சாத்தன்பறம்பு என்ற இடத்தில் வேலாயுதன் மனைவி வசந்தா (67) என்பவர் மது விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டருகில் விற்பனைக்காக வைத்திருந்த 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர் அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தது, புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது போன்று புதுக்கடை சந்திப்பு பகுதியில் மது அருந்தி விட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கொல்லன் தட்டு விளை என்ற பகுதியை சேர்ந்த வியாபாரியான ஷிபு (34) என்பவரை புதுக்கடை போலீசார் கைது செய்தனர்.
Next Story

