ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தும் விசாரணை செய்ய மறுப்பு.

ஆரணி அரசு மருத்துவமனை சமையலர் எஸ்.பியிடம் புகார்.
ஆரணி அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணி, சமையலர், எலக்ட்ரிக், தோட்ட வேலை, நோயாளிகளின் துணி துவைத்தல் ஆகிய பணிகளுக்கு வேலூர் சேர்ந்த சுமித் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதில் மேனேஜராக பிரேம்குமார் என்பவரும், மேற்பார்வையாளராக லோகநாதன் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆரணி அடுத்த சம்புவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மனைவி சுதா(42) என்பவர் ஆரணி அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளாக சுமித் ஒப்பந்ததாரர் மூலம் சமையலராக பணிபுரிந்து வருகிறார். சுமித் மேலாளர் பிரேம்குமார், மேற்பார்வையாளர் லோகநாதன் ஆகிய இருவரும் அடிக்கடி என்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் சுதா கூறியும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் பிரேம்குமாரும், லோகுவும் சேர்ந்து சுதா என்பவருக்கு சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். பின்னர் சமையல் வேலையிலிருந்தும் நீக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி யிடம் ஆரணி அரசு மருத்துவமனை சமையலர் சுதா என்பவர் சுமித் மேலாளர் பிரேம்குமார், மேற்பார்வையாளர் லோகநாதன் மீதும் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது, ஆரணி அரசு மருத்துவமனையில் நான் 15 வருடங்களாக சமையலராக பணிபுரிந்து வருகிறேன். சுமித் மேலாளர் பிரேம்குமார், மேற்பார்வையாளர் லோகநாதன் என்பவரும் என்னையும், மேலும் பலரையும் பாலியல் வன்கொடுமை செய்து வருவதும் வழக்கமாகக் கொண்டு வந். அதனையும் மீறி கேட்டால் அவர்களை வேலையை விட்டு நிறுத்துவது, சம்பளம் கொடுக்காமல் அலைக்கழிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போகிறேன் என்று தெரிந்த பிரேம்குமார் லோகுவும் சேர்ந்து கொண்டு நான் காவல்துறை புகார் கொடுத்தால் என்னை கடத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். எனவே இவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆகவே இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு கிடைக்க வேண்டிய இரண்டு மாத சம்பளமும் மீண்டும் நான் பணிபுரியும் ஏற்படும் இருந்து என்னை காப்பாற்றியும் இனி எவருக்கும் இது போன்ற பாலியல் வன்கொடுமை நடக்காமலும் சுமித் லிமிடெட் கம்பெனிக்கும், அரசு மருத்துவமனைக்கும் அவப்பெயர் ஏற்படாமல் இருக்கவும் எனக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் புகாரை வாங்க மறுக்கிறார்கள். நீங்கள் எங்கு சென்று புகார் கொடுத்தாலும் எங்களிடம் தான் வர வேண்டும் நாங்கள் விசாரணை செய்ய மாட்டோம் என மறுக்கிறார்கள் இதன் மூலம் பிரேமும், லோகுவும் மகளிர் காவல் நிலையத்தில் கவனித்துவிட்டார் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் என் உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டால் பிரேமும், லோகமும் தான் பொறுப்பு என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு எஸ்.பி அலுவலகத்திலிருந்து ஆரணி மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டனர். ஆரணி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெகட்ர் பிரபாவதி என்பவர் இரு தரப்பினரையும் அழைத்து சுதாவிடம் புகார் மனுவை வாபஸ் வாங்குமாறு கூறியுள்ளதாக தெரிகிறுத. ஆனால் சுதா கொடுத்த புகாரை வாபஸ் வாங்க மாட்டேன் என்றும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் சுமித் மேலாளர் பிரேம், மேற்பார்வையாளர் லோகு ஆகியோர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சுமித் பணியாளர்களை அனைவரையும் மகளிர் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்து மகளிர் இன்ஸ்பெக்டரிடம் நாங்கள் நல்லவர்கள் என்று கூறுங்கள் என்று மிரட்டி வருவதாகவும் தெரிகிறது. இனால் அரசு மருத்துவமனையில் பணி புரிந்துவந்த சுமித் பணியாளர்கள் அனைவரும் பணி செய்வதை நிறுத்திவிட்டு ஆரணி மகளிர் காவல்நிலையத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட சுமித் பணியாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் ஆரணி அரசு மருத்துவமனை பணிகளான நோயாளிகளுக்கு சாப்பாடு கொடுப்பது,தூய்மை பணிகள் செய்வது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.
Next Story