புதிய இலக்கிய சாரல் தமிழ் தொண்டு நிறுவனம் தொடக்கம்!

X

கோவில்பட்டி சகாராவை தாண்டாத ஒட்டகம், முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பயிற்சி மைய நிறுவனர் ந. தினகரன் சார்பில் 'இலக்கியச் சாரல்' என்ற தமிழ்த் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சகாராவை தாண்டாத ஒட்டகம், முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பயிற்சி மைய நிறுவனர் ந. தினகரன் சார்பில் 'இலக்கியச் சாரல்' என்ற தமிழ்த் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடங்கிய முதல் நிகழ்வாக மக்களின் நல்வாழ்விற்கு வழிகாட்டுவது ஐம்பெருங்காப்பியங்களா ? ஐஞ்சிறு காப்பியங்களா? என்ற பட்டிமன்றம் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் நடந்தது. அகுபஞ்சர் மருத்துவர் சேதுராமன் தலைமை தாங்கினார்.கோவில்பட்டி இசை எஃப் எம் இயக்குநர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். பட்டிமன்ற தலைவராகவும் நடுவராக தமிழ்ச் செம்மல் இரா.ராசு தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். பேச்சாளர்களாக எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணசாமி, ஆசிரியை கண்ணகி, தேசிய நல்லாசிரியை விநாயக சுந்தரி, தமிழ்ப்பணிச் செம்மல் பிரபு, முனைவர் முருகசரஸ்வதி, ஆசிரியை தங்கத்துரையரசி மற்றும் வரகவி நல்லாசிரியர் மா. முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சக்திவேல் முருகன், கழுகுமலை திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகள் பொன்ராஜ் பாண்டியன் மற்றும் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story