ராமநாதபுரம் பிரதமர் வருகை வெற்றியை நிகழ்வு நடைபெற்றது

பிரதமர் பயணிக்கும் ராணுவ ஹெலிகாப்டர் மண்டபம் ஹெலிபேட் இறங்குதளத்தற்கு வருகை பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்திகை தீவிரம்
ராமநாதபுரம் மாவட்டம்பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க வரும் பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு வந்திறங்கி ஒத்திகை நனைபெற்றது. பின்னர் இரண்டு ஹெலிகாப்டர்களும் ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பாம்பன் கடலில் இந்திய ரயில்வே துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை வரும் ஏப்ரல் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தனி விமான மூலமாக மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் பொதுப்பணித்துறை ஹெலிபேட் இறங்கு தளத்தில் இறங்கி பின்னர் சாலை மார்க்கமாக பாம்பன் சாலை பாலத்திற்கு சென்று அங்கு மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மேடையில் நின்றவாறு கொடியசைத்து ராமேஸ்வரம் தாம்பரம் இடையேயான புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் ராமநவமியையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்துவிட்டு ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் என்ற விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் உரையாற்றுகிறார். பின்னர் மீண்டும் மண்டபம் ஹெலிபேட் தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மதுரை செல்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மதுரை விமானத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அழைத்து வருவதற்காக கோவை மாவட்டம் சூலூர் இந்திய விமானப்படை நிலையத்திலிருந்து இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான MI 17 என்ற இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மண்டபம் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வந்திறங்கி ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த ஹெலிகாப்டர் ஒத்திகையின் போது இந்திய விமானப்படை மற்றும் கடற்படையினர், ராமேஸ்வரம் சரக துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்து ஆலோசித்தனர். பின்னர் இரண்டு ஹெலிகாப்டர்களும் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது முதல் கட்ட ஒத்திகை தான் என்றும், இன்னும் வரும் நாட்களில் தொடர்ந்து ஒத்திகைகள் நடைபெறும் என பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story