ராமநாதபுரம் டிஐஜி பொறுப்பேற்பு

X

ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி யாக நியமிக்கப்பட்ட மூர்த்தி காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் கோப்பில் கையெடுத்திட்டு பொறுப்பெற்றுக்கொண்டார். சட்ட விரோத செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
ராமநாதபுரம் மாவட்டம் சரக டி.ஐ.ஜி யாக அபிநவ்குமார் பணியாற்றி வந்த நிலையில் அவர் மாற்றப்பட்டு நெல்லை டி.ஐ.ஜி யாக பணியாற்றி வந்த ப.மூர்த்தி ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி யாக மாற்றப்பட்டார். இதனைதொடர்ந்து, புதியதாக நியமிக்கப்பட்ட டி.ஐ.ஜி. மூர்த்தி நேற்று காலையில் ராமநாதபுரம் காவல்துறை டி.ஐ.ஜி அலுவலகத்திற்கு வருகை தந்தார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் பூங்கொத்து வரவேற்றார். இதன் பின்னர் அலுவலகத்தில் உள்ள கோப்பில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்பாடுகளை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story