ராமநாதபுரம் ரேஷன் கடை திறப்பு

முதுகுளத்தூர் அருகே புதிதாக ரேஷன் கடை திறக்கப்பட்டது: பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பொருட்களை வாங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள அப்பனேந்தல் கிராம மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தட்டான் குடியிருப்பு கிராமத்தில் செயல்படும் ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வந்தனர். அரசு சார்பாக இலவசமாக வழங்கப்படும் அரிசி, பருப்பு, சீனி எண்ணெய், உள்ளிட்ட பொருட்களை சரக்கு வாகனங்களில் பணம் கொடுத்து ஏற்றி வந்த அவல நிலை தொடர்ந்து வந்தது . இதன் அடிப்படையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அப்பனேந்தல் கிராமத்தில் பகுதி நேர கடையாக 7.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ரேஷன் கடை கட்டுமான பணி நடைபெற்று வந்தது . இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரேஷன் கடை கட்டடம் கட்டுமான பணி முடிந்த நிலையில் . இதனை அடுத்து அப்பகுதி மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அப்பனேந்தல் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிடத்தை இன்று கூட்டுறவு சார்பதிவாளர் (பொது விநியோக திட்டம்) திருலோகசந்தர், முதுகுளத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். 50 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது கிராமத்திற்கு புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்ட நிலையிலும் திறப்பு விழாவுக்கு வருகை தந்த அதிகாரிகளுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து குலவையிட்டு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் அந்த பொருட்களை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோவிந்தம்மாள், வட்ட வழங்கல் அலுவலகப் பொறியாளர் சரவணன், ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அப்பனேந்தல், அ.நெடுங்குளம், அ.நாகனேந்தல் கிராம மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Next Story