ராமநாதபுரம் தீவிர காவல் சோதனை நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் செங்குத்து தூக்கு பலத்துடன் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலத்தை வரும் ஏப்.6 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளதாக மத்திய ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து புதிய ரயில் பாலம் திறக்கும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள், மேடை அமைக்கும் பணி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம், ராமேஸ்வரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் கடலோர காவல் குழும கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் பால்ராஜ், தலைமை காவலர் முருகப்பெருமாள் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிக்கப்பட்டு, வாகனத்தின் பதிவ எண்கள் பதிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.
Next Story

