தாயமங்கலத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தாயமங்கலத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
X
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம். தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வருகின்ற 05.04.2025 முதல் 07.04.2025 வரை முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல் மற்றும் பூ பல்லக்கு நடைபெறவுள்ளதால், தமிழ்நாடு அரசு மதுபானக் (சில்லரை விற்பனை) கடை எண்.7641, கலைக்குளம் ரோடு, தாயமங்கலம், இளையான்குடி மற்றும் கடை எண்.7630, விளான்குளம் கிராமம், தாயமங்கலம், இளையான்குடி ஆகிய அரசு மதுபானக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story