திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையை அகலப்படுத்தும் பணி தொடக்கம்

திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையை அகலப்படுத்தும் பணி தொடக்கம்
X
திருச்சி கலெக்டர் பங்களா பகுதியில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையை நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகலப்படுத்தும் பணி தொடங்கியது
திருச்சி மன்னார்புரம் நால்ரோடு பகுதி காஜாநகரில் இருந்து அண்ணா விளையாட்டரங்கம் வரை செல்லும் ரேஸ்கோர்ஸ் சாலையில் மாவட்ட கலெக்டர் பங்களா, மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி குடி யிருப்பு, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பங்களா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடியிருப்பு மற்றும் மாஜிஸ்திரேட்டுகள் குடியிருப்பு ஆகி யவை உள்ளன. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையின் அகலம் தற்போது 7 மீட்டர் ஆக உள்ளது. எதிர்கால சாலை போக்குவரத்து அதிகரிப்பை கருத்தில் கொண்டு தமி ழக அரசின் ஒருங்கிணைந்த சாலை உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட் டத்தின் (சி.ஆர்.ஐ.டி.பி) கீழ் இந்த சாலையை 10 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்த ரூ.1 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இந்த சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. சாலையின் இரு புறமும் தலா 1½ மீட்டர் அளவிற்கு அகலப் படுத்தப்பட இருக்கிறது. முதல் கட்டமாக சாலையின் ஒரு புறம் இந்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது பொக்லைன் எந்தி ரங்கள் மூலம் சாலை அருகில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. அதன் பின்னர் கிராவல் மற்றும் கருங்கல் ஜல்லிகள் போட்டு மேம்ப டுத்தப்பட்டு இறுதி பணிகள் முடிவடைந்த பின்னர் சாலையின் மறு பக் கத்தில் அகலப்படுத்தும் பணி தொடங்கும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த பணியானது சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story