தென்காசி அருகே உருக்குலைந்து காணப்படும் ராமநதி சாலை

X

உருக்குலைந்து காணப்படும் ராமநதி சாலை
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கடையத்திலிருந்து ராமநதி அணைக்கு செல்லும் எட்டு கிலோமீட்டர் தொலைவில் தார் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தார் சாலையை ராமநதி அணைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அங்குள்ள விவசாய நிலங்களில் பணிபுரியும் விவசாயிகள் அந்தப் பகுதி உள்ள தார் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தார்சாலை உருக்குலைந்து காணப்படுவதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த அந்த சாலையில் சென்ற போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு விரைவில் புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story