திருப்பத்தூர் அருகே கடன் தொல்லையால் கட்டிடம் மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை*

திருப்பத்தூர் அருகே கடன் தொல்லையால் கட்டிடம் மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை*
X
திருப்பத்தூர் அருகே கடன் தொல்லையால் கட்டிடம் மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கடன் தொல்லையால் கட்டிடம் மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை திருப்பத்தூர் மாவட்டம் கசிநாயக்கன்பட்டி அடுத்த காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் இவருடைய மகன் பழனி (32) இன்னும் திருமணம் ஆகவில்லை ‌ மேலும் இவர் மீது பெங்களூர் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தபோது ஒரு கொலை வழக்கில் சிறை சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் சுமார் 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடன் தொல்லை அதிகமாக மன வேதனையில் இருந்த பழனி தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்க்கும் பொழுது தூக்கில் தூங்கி நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து பழனியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கடன் தொழியால் கட்டிடம் மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story