இ-பாஸ் பரிசோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன ..

போக்குவரத்து நெரிசல்
நீலகிரி நுழைவாயிலான கல்லாறு சோதனைச் சாவடியில் இ பாஸ் சோதனை தீவிரம் நீண்ட தூரம் வரிசையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் இ-பாஸ் பரிசோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன .. நீலகிரி கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாச ஸ்தலங்களுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து தற்போது வரை இந்த இ பாஸ் நடைமுறை அமலில் இருந்து வரும் நிலையில். நேற்றைய தினம் இ-பாஸ் நடைமுறையை நீலகிரி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகங்கள் நடைமுறைக்கு வந்தது. மலைப்பகுதியில் வாகன எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்ததையடுத்து ஏற்கனவே இபாஸ் நடைமுறை அமலில் இருந்து வரும் நீலகிரி கொடைக்கானல் பகுதிகளில் இ பாஸ் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது குறிப்பாக நீலகிரி நுழைவாயில் உள்ள மேட்டுப்பாளையத்துக்குள் நாள்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் , வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள கல்லாறு சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களும் இ_பாஸ் பதிவு செய்து வருகின்றதா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சோதனை சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நின்று இ-பாஸ் சோதனைக்கு பின்னரே நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 6000 வாகனங்கள் மட்டும் நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.6000 வாகனங்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைந்துவிட்டாள் தனாகாகவே இ பாஸ் செயழி செயல் செய்யாது. இந்த நிலையில் இ பாஸ் சோதனை செய்யும் சாவடிகளில் TN43 என்று கூறி கொண்டு வரும் வாகனங்கள் தங்களை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் வாக்குவாதம் செய்து அத்துமீறி வருகின்றனர்.
Next Story